Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனவருத்தம் - பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்லாத இளையராஜா

28 டிச, 2020 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-upset;-not-send-to-Prasad-Studio-to-collect-his-music-things

சட்டப்போராட்டம் நடத்தி பிரசாத் ஸ்டுடியோவிற்கு செல்ல அனுமதி பெற்ற இளையராஜா, மன வருத்தம் காரணமாக அங்கு செல்லவில்லை. அவர் சார்பில் வேறு சிலர் அவரது இசைக்கருவிகளை எடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

அன்னக்கிளி தொடங்கி 1000 படங்களுக்கு மேல் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. சென்னை, சாலிகிராமம், பிரசாத் ஸ்டுடியோவில், ஒலிப்பதிவு கூடம் உள்ளது. அதை, 35 ஆண்டுகளாக, இசை அமைப்பாளர் இளையராஜா பயன்படுத்தி வந்தார். ஒலிப்பதிவு கூடத்தை, காலி செய்யும்படி, பிரசாத் நிர்வாகம், இளையராஜாவை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, தொடரப்பட்ட வழக்கு சமரச பேச்சுக்கு சென்றது. அதில், முடிவு ஏற்படாததால், சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும், ஒலிப்பதிவு கூடத்தில், ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடுத்தார். மேலும், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் கோரியிருந்தார். இந்த வழக்கில் பலக்கட்ட சமரசம், பேச்சுவார்த்தைக்கு பின் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக இளையராஜா கூறினார். இதை ஏற்ற நீதிமன்றம், ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி வழங்கியது. மேலும் இளையராஜா தியானம் மேற்கொள்ளவும், இளையராஜாவுக்கு சொந்தமான பொருட்களை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம், தனது சொந்த செலவில் எடுத்துச் சென்று ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று(டிச., 28) பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா வருவதாக இருந்தது. முன்னதாக அவரது வக்கீல் பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை தந்து ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள் குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு கூறினார். அதில் இளையராஜா பொக்கிஷமாக பாதுகாப்பாக வைத்திருந்த சில பொருட்கள் அவரின் அனுமதியின்றி அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவரின் தனியறை கதவு உடைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு மன வருத்தத்தில் உள்ள இளையராஜா தனது வருகையை ரத்து செய்துள்ளார். இளையராஜாவை சமாதானம் செய்ய பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
செல்வராகவன், தனுஷ், ஷான் ரோல்டன் கூட்டணி என்ன ஆனது ?செல்வராகவன், தனுஷ், ஷான் ரோல்டன் ... தியேட்டரில் 100 சதவீதம் இருக்கை : முதல்வரிடம் விஜய் நேரில் கோரிக்கை தியேட்டரில் 100 சதவீதம் இருக்கை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
29 டிச, 2020 - 15:41 Report Abuse
ராஜவேலு ஏழுமலை புண்ணியத்திற்கு பூ கொடுத்தால் வீட்டுக்கு போய் முழம் போட்டு பார்த்த கதையாகிவிட்டது.
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
29 டிச, 2020 - 13:18 Report Abuse
S Ramkumar கதவு உடைக்கப்பட்டு இளையராஜாவின் சாமான் எடுக்கப்பட்டு உள்ளது இது எல்லாம் காலி செய்ய தவறியவர்கள் கூறும் சாக்கு. இது போன்ற செயல்கள் இளையராஜா போன்றவர்களுக்கு அழகு இல்லை.
Rate this:
navasathishkumar - MADURAI,இந்தியா
29 டிச, 2020 - 12:55 Report Abuse
navasathishkumar நமது எல்லை வரை நிற்காமல் பேராசை கொள்கிறார் இளையராஜா...இவர் யாராவது ஒரு தயாரிப்பாளருக்கு ஓசியில் இசையமைத்து கொடுத்துள்ளாரா? என்ன தியான ஆசை...இது சம்பாரிக்கும் இடம் தானே..கோவிலா? இந்த மாதிரி பல வருடங்கள் பிரசாத் ஸ்டூடியோவில் காலம் தள்ளி விட்டு கோர்ட் ஆர்டரையும் பெற்று விட்டு தியானம் செய்ய போனேன்..என் அறையில் பொருட்கள் இல்லை என்று சொல்வது சரியா இசை தெய்வமே? அவர் வீட்டில் இப்படி இருந்த சகோதரர் கங்கை அமரனை ஏன் கானோம்...பாட்டுக்கு பாட்டும் எழுதி கொடுத்து டைட்டில் கார்டில் அன்று வாலிக்கு அடுத்து கங்கை அமரன் என்று இருந்ததை வைரமுத்து என மாற்றியது ஏன்? இளையராஜாவை எந்த மீடியாவும் கேட்கவில்லை. இளையராஜா வரம்பு மீறுகிறார் என்பதை சுட்டி காட்டுங்கள். கடவுள் வேடம் சரி ஆனால் பாலாபிஷேகம் செய்தவர்களை (ப்ரசாத் ஸ்டூடியோ) மதிக்காத க்ல் தானே இந்த கடவுள்..மாறுங்கள் ராசா....
Rate this:
crap - chennai,இந்தியா
29 டிச, 2020 - 12:34 Report Abuse
crap இவர் இசையமைத்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் இசைக்கான காப்புரிமையை மிக குறைந்த விலைக்கு எழுதி வாங்கிவிடுவார் என்று சித்ரா லெட்சுமணன் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இசை அமைப்பதற்கு பணம் வாங்குவதோடு, இசையையும் வாங்கும் வல்லமை படைத்த இசை சக்கரவர்த்தி பிரசாத் ஸ்டூடியோவையும் ஆட்டைய போடலாம் என்று பார்த்தார். அவர்கள் இவரைவிட பெரிய கோஷ்டி, பேக் பண்ணி வெளியே அனுப்பிட்டாங்க. இதுல ஐம்பது லட்சம் நஷ்ட ஈடு வேணுமாம். பாலசுப்ரமணியனையே பாடக் கூடாதுன்னு நோட்டீஸ் அனுப்பிய இசை வேந்தர் வாழ்க்கையில் இன்னும் என்ன என்ன பார்க்க போறாரோ?
Rate this:
navasathishkumar - MADURAI,இந்தியா
29 டிச, 2020 - 12:24 Report Abuse
navasathishkumar இளையராஜாவுக்கு தியானம் இப்ப என்ன அவசியம். இது என்ன மடமா? கோவிலா? சம்பாரித்து கொடுத்த இடம். இவர்தான் மரியாதையாய் காலி செய்து தர வேண்டும். அப்படி ஒன்றும் இளையராஜா எந்த தயாரிப்பாளருக்கும் ஓசியில் இசையமைத்து தரவில்லை. பல தயாரிப்பாளர்களின் காசை வாங்கி இசையமைத்து பெயர் வாங்கிவிட்டது போதும் ராசா..வெளிய வாப்பா.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in