மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
ரசிகர்களை தனது க்யூட்டான சிரிப்பால் கவர்ந்திழுத்து வசப்படுத்தியவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமான படம் கிரிக் பார்ட்டி. இந்தப்படத்தில் இடம்பெற்ற பெலாகெட்டு என்கிற பாடல் தற்போது யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்கள் என்கிற சாதனையை தொட்டுள்ளது. இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, “நூறு மில்லியனை தொட்ட எனது முதல் பாடல். என்றென்றும் என் நினைவில் இருக்கும்” என டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா. மேலும் அதில் படத்தின் நாயகன் ரக்சித் ஷெட்டியையும் டேக் செய்திருந்தார்.
இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? இந்தப்படத்தில் நடிக்கும்போது தான், இருவருக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் வரை சென்றது.. ஆனால் அதன்பிறகு தெலுங்கில் ராஷ்மிகாவின் படங்கள் ஹிட்டாகி, முன்னணி நடிகையாக மாறியதும், நிச்சயதார்த்தத்தை ரத்துசெய்து, காதலரையும் பிரிந்துவிட்டார் ராஷ்மிகா. இந்தநிலையில் அவர் தற்போது, ரக்சித் ஷெட்டி பெயரை குறிப்பிட்டிருப்பதுதான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
ராஷ்மிகாவின் இந்த டுவீட்டிற்கு பதிலளித்துள்ள ரக்சித் ஷெட்டியும் கூட, “மேலும் மேலும் வளருக பெண்ணே.. உன்னுடைய அனைத்து கனவுகளும் நனவாகட்டும்” என பதிலுக்கு வாழ்த்தி உள்ளார்.. ஒருகாலத்தில் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொண்டவர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பாசிடிவ் அணுகுமுறைக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.