நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினிகாந்த்துக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா நெகடிவ் என ரிசல்ட் வந்தாலும் அவர் தன்னை அங்கேயே தனிமைப்படுத்தி கொண்டார். ஆனால் தற்போது அவரது ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், ரஜினிகாந்த் விரைவில் குணமடைய விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறைவால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினிகாந்த் நிறைந்த தைரியம் உள்ளவர். அதுமட்டுமல்லாது ஆன்மிகம் நம்பிக்கை உள்ளவர். கடவுளின் ஆசீர்வாதங்களை பெற்று விரைவில் குணமடைவார். அவர் வழங்கும் மஹா அவதார் பாபாஜியின் ஆசீர்வாதங்களை பெற்று, அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன்வர வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் பவன் கல்யாண்