துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
மலையாளத்தில் நடிகர் ஜெயசூர்யா தற்போது தனது நூறாவது படமான 'சன்னி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை மஞ்சு வாரியர். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக திரையுலகில் வலம் வரும் இவர்கள் இருவரும் இப்போது தான் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப்படத்தை பிரஜேஷ் சென் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயசூர்யா நடிப்பில், பிரபல கால்பந்தாட்ட வீரரான விபி சத்யன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி 'சத்யன்' என்கிற படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல, மீண்டும் ஜெயசூர்யாவை வைத்து, குடியை மையப்படுத்தி இவர் இயக்கிய 'வெள்ளம்' திரைப்படம், அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் கொரோனா காரணமாக, ரிலீஸாக முடியாமல் நிற்கிறது. இந்தநிலையில் தான், இவர்கள் கூட்டணி மூன்றாவது படத்திற்காக இணைந்துள்ளது..