துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் படம் 'புஷ்பா'. செம்மர கடத்தல் தொடர்பான இந்த கதையில் போலீஸ் வேடம் ஒன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதில் நடிக்க விஜய் சேதுபதியை முதலில் கேட்டனர். முதலில் நடிக்கலாம் என்று இருந்தவர் பின்னர் பின் வாங்கிவிட்டார். இதனால் வேறு நடிகரை தேடி வந்தனர். இப்போது அதில் ஆர்யா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன் அல்லு அர்ஜுன் நடித்த வருடு என்ற படத்தில் ஆர்யா வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக ஆர்யா ஹீரோவாக மட்டுமல்லாமல், மல்டி ஹீரோ படங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது விஷாலுக்கு வில்லனாக எனிமி என்ற படத்தில் நடிக்கிறார்.