துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
ஐதராபாத் : ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினி ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் தான் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்புக்காக சிறப்பு விமானத்தில் ஐதராபாத் சென்றார் நடிகர் ரஜினிகாந்த். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று(டிச., 25) திடீரென ரஜினி, ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : இன்று (டிச.,25) நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்ணாத்த படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 22ம் தேதி நடந்த பரிசோதனையில், ரஜினிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. அப்போது முதல் அவர், தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
அவருக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையிலும், அவரது ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடு ஏற்பட்டது. இதனால், தொடர் சிகிச்சைக்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீடு திரும்புவதற்கு முன்னர், ரத்த அழுத்தம் சீராகும் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார். ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர மற்ற எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. மருத்துவ ரீதியில் அவர் ஸ்திரமாக உள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.