இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
கடந்த வருடம் மலையாளத்தில் நயன்தாரா, நிவின்பாலி இணைந்து நடித்த 'லவ் ஆக்சன் ட்ராமா' திரைப்படம் வெளியாகி வெற்றியும் பெற்றது.. பிரபல இயக்குனர் வினீத் சீனிவாசனின் தம்பியும், வளர்ந்து வரும் ஹீரோவுமான நடிகர் தயன் சீனிவாசன் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். முன்னணி காமெடி நடிகரான அஜு வர்கீஸ் இந்தப்படத்தை தயாரித்திருந்தார்.
இந்தநிலையில் இவர்கள் இருவரும் தற்போது, 'பவுடர் சின்ஸ் 1905 (Powder Since 1905) என்கிற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்தப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே குஞ்சிராமாயணம், அடி கப்பியாரே கூட்டமணி, சச்சின் உள்ளிட்ட பல படங்களில் காமெடியில் கலக்கியவர்கள் தான் இந்த தயன்- அஜு வர்கீஸ் கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நடிப்பதுடன் படத்தையும் தானே தயாரிக்கிறார் நடிகர் அஜு வர்கீஸ்.