அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் |
மகேஷ்பாபு தெலுங்கில் அடுத்தததாக நடிக்கும் படம் சர்க்காரு வாரி பாட்டா. பரசுராம் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வங்கி ஊழல்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாக இருக்கிறது. அதனால் இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரமாகவே பல காட்சிகளில் வங்கி ஒன்று இடம் பெறுகிறது. இதற்காக ஆந்திரா மற்றும் தெலங்கனாவில் படப்பிடிப்பு நடத்த தோதான வங்கி ஒன்றை தேடியும் கிடைக்கவில்லை.. அதையடுத்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வங்கி செட் அமைத்து படமாக்க இருக்கிறார்கள் என சொல்லப்பட்டது.
இந்தநிலையில் வங்கி செட் அமைக்கும் செய்தி உண்மையில்லை என்றும் நிஜமான வாங்கி ஒன்றிலேயே தான், படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இங்கல்ல, அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரத்தில் உள்ள வங்கி ஒன்றில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட இருக்கிறதாம்.. இயக்குனர் பரசுராம் எதிர்பார்த்த சகல வசதிகளுடன் அந்த வங்கி இருப்பதுடன், முறையான பாதுகாப்பு விதிகளுக்குட்பட்டு படப்பிடிப்பு நடத்திக் கொள்ளவும் அந்த வங்கி நிர்வாகம் அனுமதி அளித்து விட்டதாம்.