‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | படிப்பை விற்காதீர்கள்: தனுஷ் | மீண்டும் ஒரு ‛லக்கி மேன்' : ஹீரோவாக யோகி பாபு | பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ் | 'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா | அமெரிக்க வசூல் - இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்' | ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார் | பிப்ரவரி 18ல் சிம்புவின் ‛பத்து தல' படத்தின் இசை விழா |
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம் காட்டேரி. டீகே இயக்கி உள்ள இந்தப் படத்தில் வைபவ், வரலட்சுமி, சோனம் பாஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்சினை, கொரோனா பிரச்சினை காரணமாக படம் வெளிவராமல் முடங்கி கிடந்தது.
தற்போது கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில் படத்தை வெளியிட முடிவு செய்து படத்தின் டீசர், சினேக்பீக் உள்ளிட்டவைகள் வெளிவந்து நல்ல வரவேற்பையும் பெற்றது. ஆனால் தற்போது கொரோனாவின் 2வது அலை பரவுவதாக கூறி மீண்டும் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கொரோனா 2ம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
இப்பொழுது நிலவும் குழப்பமான மற்று நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு காட்டேரி திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு சரியான முறையில் மக்களை சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில் டிசம்பர் 25ந் தேதி வெளிவருதாக இருந்த படத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனாவின் தாக்கம் குறைந்த உடன் படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.