கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 8 மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. 2 மாதத்திற்கு முன்பு மாநில அரசுகள் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது. என்றாலும் பயம் காரணமாக பெரிய நடிகர்களின் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை.
தற்போது தான் பெரிய நடிகர்களின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. ஆனாலும் கொரோனா அச்சத்துடனேயே பெரிய நடிகர்கள் நடித்து வருகிறார். அப்படி இருந்தும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடுகிறது. ரஜினி நடித்து வந்த அண்ணாத்த படக் குழுவினரில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா அச்சத்தின் காரணமாக நடிகர் யஷ், தன் வீட்டுக்கே செல்லாமல் ஓட்டலில் தங்கி உள்ளார். தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் கேஜிஎப் இரண்டாம் பாகம் படத்தில் தற்போது நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் தான் படப்பிடிப்பு முடிந்தது. இருப்பினும் வீட்டிற்கு செல்லாமல் ஸ்டார் ஓட்டலில் தங்கி உள்ளார். கொரோனா பிரச்னை காரணமாக குடும்பத்தினரின் பாதுகாப்பை கருதி இந்த முடிவை எடுத்துள்ளார். யஷின் இந்த பாணியை மற்ற முன்னணி நடிகர், நடிகைகளும் பின்பற்ற முடிவு செய்திருக்கிறார்கள்.