இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் பேய் சீசன் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. அரண்மணை 3, தேவி 3, அவள் 2, காஞ்சனா 4 என பேய் படங்கள் பெரிய பட்ஜெட்டிலும் தயாராகிறது. சிறிய பட்ஜெட்டிலும் தயாராகிறது. அந்த வரிசையில் சிறிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் மாயத்திரை. அறிமுக இயக்குனர் தி.சம்பத்குமார் இயக்கத்தில் அசோக்குமார், ஷீலா ராஜ்குமார், சாந்தினி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்திருக்கிறார். இளையராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் தி.சம்பத்குமார் கூறியதாவது: இது ஒரு பேய் படம். ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும் . பொதுவாக பேய் படங்களில் வரும் ஹீரோ, ஹீரோயின் ஏதாவது ஒரு சூழ்நிலையில வில்லனால் பாதிக்கப்பட்டு இறந்து போய்விடுவார்கள் . பிறகு அவர்கள் பேயாக மாறி வில்லனை பழி வாங்குவார்கள்.
ஆனால் இந்த படத்தில் வருகிற பேய் யாரையும் பழிவாங்கவில்லை . தனக்கு துரோகம் செய்தவர்களை இந்த பேய் தண்டிக்கவில்லை. மாறாக மன்னிக்கிறது. இந்த பேய் தன் காதலையே விட்டுக் கொடுத்து தியாகம் செய்கிறது. அது ஏன்? எதற்கு என்பது தான் படத்தின் கதை. இந்தப் படத்தை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு பேயின் பேரன்பைச் சொல்கின்ற படம்.
அதிகமான வன்முறை காட்சிகளோ ஆபாசமான காட்சிகளோ இல்லை. அதனால் குடும்பத்துடன் தைரியமாக இந்த படத்தை பார்க்கலாம். கார்ப்பரேட் யுகத்தில் நமது பாரம்பரியத்தையும், குல தெய்வ வழிபாட்டையும் இன்றைய தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமா மறந்து கொண்டு இருக்கிறார்கள். அதை நினைவூட்டும் விதமாக இந்த படம் இருக்கும் என்றார்.