நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தில் தொடங்கி கடந்த 10 ஆண்டுக்குள் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். சமீபத்தில் தொழில் அதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த சில வாரமாக மாலத் தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு தேனிலவு சென்று விட்டு திரும்பி உள்ளனர்.
தற்போது காஜல் அகர்வால் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தமிழில் இந்தியன் 2, மற்றும் பெயரிடப்படாத திகில் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது கணவருடன் இணைந்து கிச்சட் என்ற பெயரில் புதிதாக ஒரு நிறுவனம் தொடங்கி உள்ளார். வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்து தருதல். மற்றும் உள் அலங்காரத்துக்கான பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தை அறிமுகப்படுத்தும் விதமாக கணவருடன் இணைந்து எடுத்த புரமோசனல் வீடியோ ஒன்றையும் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார்.