"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் ஆண்ட்ரியா என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். நேற்று முன்தினம் ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படக்குழுவினர் ஆண்ட்ரியா-விஜய் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர். அதேநேரம் பிசாசு படக்குழுவுனரும் ஆண்ட்ரியாவின் கேரக்டர் போஸ்டரை வெளியிட்டனர். ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிசாசு படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ள ஆண்ட்ரியா, மாஸ்டர் படத்தின் புகைப்படத்தை பகிரவே இல்லை.
மாஸ்டர் படம் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை, அந்தப்படத்தின் இன்னொரு நாயகியான மாளவிகா மோகனனின் புகைப்படங்களும் அவரைபற்றிய செய்திகளும் தான் அடிக்கடி வெளியாகி வருகின்றன. ஆண்ட்ரியா குறித்து எந்த சத்தமும் இல்லை. மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் கூட ஆண்ட்ரியா கலந்து கொள்ளவில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வெளியான தனது மாஸ்டர் பட புகைப்படத்தை கூட, ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா ஏதேனும் வருத்தத்தில் இருக்கிறாரா என்கிற ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.