75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் | அசிங்கப்பட்ட கேப்ரில்லா, கலாய்த்து தள்ளிய அரவிஷ்! | சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ராதிகா ப்ரீத்தி! மகிழ்ச்சியில் ரசிகர்கள் | பாலிவுட்டை மாற்றிவிட்டதா 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப்' | நயன்தாராவை காப்பியடித்த ஆர்த்தி கணேஷ்! விக்னேஷ் சிவனின் கமெண்ட் | மோகன்லாலின் திரிஷ்யம்-3 விரைவில்! | கணவரின் மரணம் எதிரொலி: உடல் உறுப்பை தானம் செய்வதாக அறிவித்த மீனா! | கண்ணன் என் காதலன், சின்னக்கவுண்டர், வீட்ல விசேஷம் - ஞாயிறு திரைப்படங்கள் |
பரியேறும் பெருமாள் படத்தில் இணைந்த கதிர், கயல் ஆனந்தி ஜோடி, புதுப்படம் ஒன்றில், மீண்டும் இணைந்து உள்ளனர். இவர்களுடன், நரேனும் இணைந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம், த்ரில்லர் பாணியில் உருவாகிறது. படத்தை, ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார். படத்தை, ஏ.ஏ.ஏ.ஆர்., பட நிறுவனம் சார்பில், லவன் பிரகாசன், குசன் பிரகாசன் தயாரிக்கின்றனர்.
இது குறித்து, படக்குழுவினர் கூறியதாவது: எங்களது முதல் படம் இது. புதிய இளம் திறமையாளர்களை, சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். ஸாக் ஹாரிஸ், லண்டனில் திரைப்பட பிரிவில் தேர்ச்சி பெற்று உள்ளார். இப்படத்தை தரமான படைப்பாக உருவாக்குவார். கதிர், ஆனந்தி கெமிஸ்ட்ரி, மீண்டும் வெற்றியை பெற்றுத்தரும். வரும், 2021 துவக்கத்தில், பட வேலை ஆரம்பித்து, கோடைக்காலத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.