"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
கடந்த சில வருடங்களுக்கு முன் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மிகப்பெரிய ஹிட் இல்லையென்றாலும், வழக்கமான பேய் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு பாசிட்டிவாக எடுக்கப்பட்டிருந்தது. ரசிகர்களிடம் வரவேற்பையும் பெற்றது. பிசாசுவாக பிரயாகா மார்ட்டின் நடித்திருந்தார். இந்நிலையில் பிசாசு-2 படம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் .கதாநாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் பூர்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பர்ஸ்ட்லுக் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் பழங்கால ஆங்கிலோ இந்திய பெண்மணியின் தோற்றத்தில் ஆண்ட்ரியா காணப்படுகிறார். இந்த கெட்டப்பிற்கான ஐடியா மிஷ்கினுக்கு கிடைத்ததே ஆண்ட்ரியாவின் பாட்டி மூலமாகத்தான் என்பது தற்போது ஆண்ட்ரியாவின் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் தெரியவந்துள்ளது. தன்னுடைய போஸ்டரையும் அதேபோன்ற கெட்டப்பில் தோற்றமளிக்கும் தனது பாட்டியின் புகைப்படத்தையும் ஒன்றாக வெளியிட்டு “இந்த பிசாசு-2 பர்ஸ்ட்லுக்கிற்கு பின் ஒரு கதை உள்ளது” என கூறியுள்ளார் ஆண்ட்ரியா.