இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
தமிழ் சினிமாவில் வெளிவந்த ஆக்ஷன் படங்களில் அதிரடியான ஒரு ஆக்ஷன் படமாகவும், ரஜினிகாந்தின் வெற்றிப் படங்களில் மிக முக்கியமான படமாகவும் அமைந்த படம் பாட்ஷா.
1995ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தைப் இப்போது பார்த்தாலும் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் பரவசப்படுவார்கள். அந்த அளவிற்கு சென்டிமென்ட், ஆக்ஷன் என அதிரடி கிளப்பிய படம்.
அப்படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர் நக்மா. தமிழில் பல வெற்றிப் படங்களில் நக்மா நடித்திருந்தாலும் பாட்ஷா படம் அவருக்கு எவ்வளவு முக்கியமான படம் என்பதை ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ஆகியோருடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
அதில், “லண்டனுக்கு ரஜினிகாந்த்ஜியும் அவரது மனைவி லதாஜியும் வந்த சமயத்தில் நாங்கள் சந்தித்தது. நட்புடனான நினைவுகள். மிகவும் மறக்கமுடியாத திரைப்படமான பாட்ஷாவில் நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.