விவேக் மறைவு என்னை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியது - இளையராஜா | மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவோம் - சிம்பு | பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரம் லீவு போட்ட சுதீப் | ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மீரா ஜாஸ்மின் | சித்தார்த் பிறந்தநாளில் மகாசமுத்ரம் போஸ்டர் வெளியீடு | தமிழில் உருவாகும் மோசன் காமிக்ஸ் சூப்பர் ஹீரோ படம் | இறுதிக்கட்டத்தில் அதர்வா படம் | எம்.ஜி.ஆர் மகன்: தந்தை மகன் ஊடலை சொல்லும் படம்: பொன்ராம் | ஹிந்தி டிவி நடிகை பாருல் சவுத்ரி குடும்பம் கொரோனாவால் பாதிப்பு | விடைபெற்றார் விவேக் : அரசு மரியாதையுடன் உடல் தகனம் - மரக்கன்றுகள் ஏந்தி ரசிகர்கள் அஞ்சலி |
ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி சட்டசபை உறுப்பினராக உள்ளார் நடிகை ரோஜா. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதியை சேர்ந்த 17 வயது ஆதரவற்ற மாணவி புஷ்பகுமாரியை தத்தெடுத்தார்.
கடந்த 8ஆம் தேதி திருப்பதியில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தை பார்வையிட்ட அவர் அங்கு நீட்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று நிதி நெருக்கடியால் தன் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் போன புஷ்பகுமாரி என்ற மாணவி இருப்பதை அறிந்தார். அவரின் எதிர்கால நலன் கருதி அப்பெண்ணை தத்தெடுத்துக் கொள்ள முடிவு செய்தார்.
அதனை தற்போது முறைப்படி அறிவித்துள்ளார். அந்த சிறுமியின் மருத்துவ படிப்பிற்கான மொத்த செலவையும் தானே ஏற்றுக் கொள்ளவதாக அறிவித்தார். இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோன் ரெட்டி மனம் திறந்து பாராட்டி உள்ளார்.