"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பிசாசு 2 படப்பிடிப்பில் இருந்த அவருக்கு படக்குழு சார்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதில் இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர்கள் ஈஸ்வரி சில்வியா, மஹா காஷ்யப், ஜூல்ஸ் ரோஹன், ஹெர்மான் சித்தார்த், குறிஞ்சி பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் புகைப்படங்களை இயக்குனர் மிஷ்கின் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் ஆண்ட்ரியாவுக்காக வாங்கப்பட்ட கேக் இருக்கிறது. அதில் பிசாசு ஆண்ட்ரியா என எழுதப்பட்டுள்ளது.
மேலும் ஆண்ட்ரியாவின் புகைப்படம் ஒன்றையும் சமூகவலைதளப் பக்கத்தில் மிஷ்கின் பகிர்ந்துள்ளார். பிசாசு 2 படத்தில் பூர்ணா தான் பேயாக நடிக்கிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், மிஷ்கின் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம், ஆண்ட்ரியா தான் பேயாக நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.