ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் உள்பட பல மொழி சினிமாத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் தமன்னா. தமிழில் தனது முதல் படமான கேடி, கொஞ்சம் சொதப்பினாலும், கல்லூரி மூலம் மக்களின் கவனம் ஈர்த்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி தமன்னாவை அடுத்தக்கட்டதுக்கு நகர்த்திச் சென்றது.
பாகுபலியை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர தமன்னா தயங்குவதில்லை. தமிழ் மற்றும் தெலுங்கில் நயன்தாராவுக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் அவர், தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருக்கிறார்.
எனவே நாளுக்கு நாள் அவரது ரசிகர் வட்டம் பெரிதாகிக்கொண்டே தான் இருக்கிறது. ரசிகர்களை உற்சாகப்படுத்த சமூகவலைதளங்களில் மிகத் தீவிரமாக இயங்கி வருகிறார் தமன்னா. அவ்வப்போது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தமன்னா தனது பிறந்தநாளை இன்று (21.12.2020) கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் நேற்று விமானம் மூலம் மும்பை சென்றார். அங்கு அவரது குடும்பத்தினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் அவர். ரசிகர்களும், திரைத்துறைச் சேர்ந்தவர்களும் தமன்னாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்தநாளையொட்டி காமன் டிபி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.