கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
சூர்யாவின் சூரரைப்போற்று, தனுஷின் அசுரன், மலையாளத்தில் வெளியாகி ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகி உள்ள ஜல்லிக்கட்டு உள்ளிட்ட இந்திய படங்கள், 78வது கோல்டன் குளாப் விருதுக்கு திரையிட தேர்வாகி உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து, தயாரித்த படம் சூரரைப்போற்று. அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார். ஏர்டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர் கோபின்நாத்தின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த நவ., 12ல் ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 78வது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு சிறந்த வெளிநாட்டு படங்களின் பிரிவில் இப்படம் போட்டியிட உள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்களுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களும் கோல்டன் குளோப் விருதுகளில் போட்டியிட தகுதி பெற்றுள்ளன. இந்த பெருமைக்குரிய விருது வழங்கு விழாவில் போட்டியிட அனுமதி பெற்ற முதல் நேரடி ஓடிடி வெளியீடுத் திரைப்படம் இதுவே. இந்த தவகலை சூர்யாவின் 2டி நிறுவனத்தைச் சேர்ந்த ராஜசேகர் கற்பூரசுந்தரபாணியன் தனது டுவிட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேப்போன்று வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், பசுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பையும், பாராட்டையும் பெற்ற படம் அசுரன். பூமணியின் வெட்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் தனுஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஏற்கனவே கோவாவில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு இப்படம் தேர்வாகி உள்ள நிலையில் இப்போது 78வது கோல்டன் குளோப் விருதுக்கு சிறந்த வெளிநாட்டு படங்களின் பிரிவில் திரையிட தேர்வாகி உள்ளது.
இதேப்போன்று மலையாளத்தில் வெளியான ஜல்லிக்கட்டு, ஹிந்தியில் வெளியான தன்ஹாஜி போன்ற படங்களும் இத்திரைப்பட விழாவுக்கு தேர்வாகி உள்ளன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2021, ஜனவரியில் இந்த விழா நடைபெறவுள்ளது.