ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
ஒருபக்கம் பிஸிசியாக படங்களில் நடித்து வந்தாலும், புதிய முயற்சி என்பதால் வெப் சீரிஸில் நடிக்கவும் பச்சைக்கொடி காட்டியுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. அந்தவகையில் இந்தியில் 'தி பேமிலி மேன்' என்கிற சூப்பர்ஹிட்டான வெப் சீரிஸை இயக்கிய, பாலிவுட்டின் இரட்டை இயக்குனர்களான ராஜ்-டிகே இருவரும் இணைந்து இயக்கவுள்ள, புதிய வெப் சீரிஸில் நடிக்க இருக்கிறார் விஜய்சேதுபதி.
மேலும் இந்த வெப் சீரிஸில் பாலிவுட் நடிகர் சாஹித் கபூரும், நடிகை மாளவிகா மோகனனும் இணைந்து நடிக்க இருகின்றனாராம். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதியும் மாளவிகா மோகனனும் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். மும்பை மற்றும் கோவா ஆகிய இடங்களில் வரும் ஜனவரியில் இந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பு துவங்க இருக்கிறதாம்.