திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார் | ரஜினி 170வது படத்தில் இணைந்த மஞ்சு வாரியர் | அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு |
தமிழில் முன்னணி இசையமைப்பளார்களாக இருக்கும் பலரும் தமிழை தாண்டி வெளியே செல்ல விரும்புவதில்லை.. குறிப்பாக மலையாள திரைப்படங்களில் பணியாற்ற, தமிழில் இருந்து சென்ற நடன இயக்குனர்கள், ஸ்டண்ட் மாஸ்டர்கள் எல்லோரும் அங்கே கோலோச்சி வரும் நிலையில், இசையமைப்பாளர்களின் கவனம் மட்டும் மலையாள திரையுலகம் பக்கம் திரும்பவே இல்லை. இந்தநிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தற்போது, முதன்முதலாக மலையாள திரைப்படம் ஒன்றுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்ற, தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்குத்தான் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார். இந்த கதையின் தன்மைக்கு சந்தோஷ் நாராயணன் போன்ற ஒருவர் இசையமைத்தால் தான் சிறப்பாக இருக்கும் என இந்தப்படத்தின் அறிமுக இயக்குனர் டார்வின் குரியாகோஷ், விரும்பியே அவரை தேர்வு செய்துள்ளாராம்.. மாஸ்டர்ஸ், லண்டன் பிரிட்ஜ், தற்போது தயாராகிவரும் கடுவா உள்ளிட்ட பிரித்விராஜின் பல படங்களுக்கு கதை எழுதிய ஜினு ஆப்ரஹாம் தான் இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ளார்.