Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை சித்ரா தற்கொலை ஏன் : போலீசில் மாமனார் பரபரப்பு புகார்

20 டிச, 2020 - 10:00 IST
எழுத்தின் அளவு:
Chitra-suicide-case-:-Father-in-law-complaint

சென்னை: தற்கொலை செய்து கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா மீது, அவரது மாமனார், பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்துள்ளார்.

சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள, தனியார் விடுதியில், சின்னத்திரை நடிகை சித்ரா, 29, இம்மாதம், 9ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஹேம்நாத்தின் தந்தை, ரவிசந்திரன், 62, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு: என் மகனும், சித்ராவும், ஒரே ஜாதி, மதம் என்பதால், இரு வீட்டார் சம்மதத்துடன், திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்து வந்தோம். சித்ராவின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது. இதனால், சித்ராவின் தாய், திருமணம் செய்து கொடுக்க காலம் தாழ்த்தி வந்தார்.பதிவு திருமணம்
ஏற்கனவே, ஒரு திருமணத்தை கெடுத்து விட்டாய் என கூறி, தாயிடம் சித்ரா சண்டையிட்டார். பின், என்னிடம், பதிவு திருமணம் செய்தால் தான், வீட்டில் சம்மதம் தெரிவிப்பர் என்றார். நான், அவரது தாயிடம் பேசிய பின், இரண்டு வீட்டார் சம்மதத்துடன் பதிவு திருமணம் செய்தனர். அதன்பின், திருமண செலவுக்கு பணமில்லை என, வீட்டில் சொல்கின்றனர். என் பெற்றோரின், 60வது திருமணத்தை சிறப்பாக செய்தேன். என் திருமணத்திற்கு பணமில்லை என்கின்றனர் என, வருத்தத்துடன் தெரிவித்தார். சரி விடுமா பார்த்து கொள்ளலாம் என, சித்ராவை சமாதானப்படுத்தினேன். இதற்கிடையே, சித்ரா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகன் கைது
என் மகனை, நசரத்பேட்டை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது, சித்ராவின் தாய்க்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. என் மகன் மீது, அவர் பொய் புகார் கொடுத்துள்ளார். இதில், எங்களிடமும் விசாரணை நடைபெற்றது. விசாரணையில், உண்மை வெளிவரும் என, எதிர்பார்த்த நிலையில், என் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ரா, நடிப்பு மட்டுமின்றி, விளம்பரம், கடை, பெரிய மால்கள் திறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பல நபர்களுடன் அரவணைப்பாக நடிக்கவும், நாங்கள் சம்மதம் தெரிவித்ததால், எந்தவிதமான சண்டைகளும் வந்தது இல்லை. அவர், பல நபர்களுடன், மொபைல் போனில் பேசிய போதும், நாங்கள் தலையிட்டது இல்லை. திருவான்மியூரில், 1.5 கோடி ரூபாய் செலவில் வீடு, 1 கோடி ரூபாய் செலவில் கார் போன்றவை வாங்கினார். அதற்கு, பலர் உதவியதாக தெரிகிறது.மிரட்டல்
தற்போது, பல்வேறு சமூக வலைதளங்களில், சித்ரா, மூன்று பேரை காதலித்ததாகவும், தொகுப்பாளர் ஒருவருடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானதும், அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிகிறது. மேலும், சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை என்பதால், அவருக்கு முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரிய நபர்கள், சினிமா நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

திருமணம் நடந்தால், பிரபலம் குறைந்து விடும் என்பதால், அவருக்கு மிரட்டல்கள் வந்திருக்கலாம். சித்ரா தங்கியிருந்த, ஓட்டலின் கண்காணிப்பு கேமரா பதிவு அழிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு சில தொலைபேசி அழைப்புகள் வந்தால், பதற்றத்துடன், தனியாக சென்று பேசுவார் என்றும், அந்த எண்களை அழித்து விடுவார் என்றும், என் மகன், என்னிடம் கூறியுள்ளார்.

அவரிடம் யார் யாரெல்லாம் பேசியுள்ளனர் போன்ற விபரங்களை சேகரித்தால், அவரை மிரட்டிய நபர்களை கண்டறியலாம். இதில், சித்ராவிற்கு மிரட்டல் அல்லது பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்களுக்கு பயந்து, அவரது தாயார் அமைதி காப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, உரிய விசாரணை அதிகாரியை நியமித்து, வெளிப்படையான விசாரணையின் வாயிலாக, உண்மை நிலையை வெளிக் கொண்டு வர வேண்டும். என் மகனை வழக்கில் இருந்து விடுவித்து, உண்மை குற்றவாளிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் மனுவில் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பணம் வாங்கக்கூடாது : மா.செ.,களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கைபணம் வாங்கக்கூடாது : மா.செ.,களுக்கு ... நடிகர் ஆரவ் வீட்டில் நிகழ்ந்த சோகம் - தந்தை மறைவு நடிகர் ஆரவ் வீட்டில் நிகழ்ந்த சோகம் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Bhaskaran - Chennai,இந்தியா
23 டிச, 2020 - 16:58 Report Abuse
Bhaskaran சின்னத்திரை சம்பாத்தியத்தில் பெரிய வீடு ஆடிகார் இதெல்லாம் எப்படி சாத்தியம்
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
21 டிச, 2020 - 23:35 Report Abuse
Easwar Kamal ரெண்டு தெலுங்கு குடும்பம் சண்டை நடுவுல நமக்கு என்ன வேலை. போய் வேற ஏதாவது ஜோலி இருந்த பெருங்காய. நடுவுல வெங்காய நாயடு வேற சொந்தம் சொல் றானுங்க. அவரு டெல்லி இருந்து கூட இந்த அயோக்கியனுக்கு வக்காலத்து வாங்கலாம்.
Rate this:
RK NATARAJ - madurai ,இந்தியா
21 டிச, 2020 - 13:25 Report Abuse
RK NATARAJ ஹேமந்த் சினிமா துறையில் உள்ளவர்களை பற்றி உங்களுக்கு தெரியும், தெரிந்து தானே திருமணம் செய்தாய். காசுக்காக திருமணம் செய்தீர்களா? ஒருத்தரை பற்றி ஒருத்தருக்கு சரியான புரிதல் இல்லாமல் அவசரப்பட்டு ரிஜிஸ்டர் திருமணம் நடந்துள்ளது. உங்கள் தந்தையின் கருத்துப்படி பார்த்தாலும், திருமணம் ஆனபிறகுதான் , அந்த பெண்ணுக்கு ஆண் நண்பர்களின் சகவாசம் வந்ததுபோல் பேசுகிறார். ? இல்லை. மரணம் நடந்த இடத்தில் கணவராகிய நீங்கள் மட்டும் தான் அருகில் இருந்து உள்ளீர்கள். பத்து நபர்கள் தொடர்பில் இருந்தார்கள் என்று வைத்துக்கொண்டாலும்..மரணத்திற்கு அவர்கள் எந்த விதத்திலும் பொறுப்பு கிடையாது.பிடிக்க வில்லையா இரண்டுபேரும் பிரிந்து இருக்கலாமே ? திருமணத்திற்கு பின்புதான் , உங்களுக்கு அந்த பெண் தப்பானவள் என்று தெரியும், என்று வைத்துக்கொண்டாலும். சட்ட ரீதியாக பிரிந்துஇருக்கலாமே? அந்த பெண்ணும் இந்த முடிவை அவசரப்பட்டு எடுத்து இருக்கக்கூடாது. சட்டம் இருக்கு, நண்பர்கள் இருக்கிறார்கள், தாய் தந்தை இருக்கிறார்கள் எல்லாரிடமும் கலந்து பேசி ஒரு முடிவை எடுத்து இருக்கலாம்.என்னமோ நூறு வருஷம் இரண்டு பெரும் வாழ்ந்தது மாதிரி , நீங்க எல்லாரும் படித்தவர்கள் தானே ஹேமந்த் தான் முழுப்பொறுப்பு, அருகில் இருந்தவரும்,காரில் அழைத்து வந்தவரும் அவர்தான். நந்தவனத்தில் ஒரு ஆண்டி அவன் நாள்தோறும் குயவனை வேண்டி ...............கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி
Rate this:
S.Baliah Seer - Chennai,இந்தியா
20 டிச, 2020 - 14:50 Report Abuse
S.Baliah Seer தெரிந்தும் ஹேமந்த் இவரைத் திருமணம் செய்ததற்கு இதுவும் வேண்டும் ,இன்னமும் வேண்டும்.
Rate this:
20 டிச, 2020 - 12:26 Report Abuse
ஆனந்த் தன் மகனைக் காப்பாற்றஇன்னொரு பெண்ணைஇவ்வளவு தரக்குறைவாக விமர்சிக்கும்இந்த மாமனாரையும் கைது செய்து விசாரிக்கவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in