Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி | மம்முட்டியுடன் மலையாளப் படத்தில் நடிக்கும் ரம்யா பாண்டியன் | தனிமைப்படுத்தாமல் படப்பிடிப்பு - கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கும் சுகாதாரத் துறை | தண்ணிவண்டியின் கதை என்ன? | மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அமீர் | தயாரிப்பு நிர்வாகிகளால் நடிகைகளுக்கு மன அழுத்தம் : சார்மிளா | மோசடி மன்னனுடன் தொடர்பு : விமான நிலையத்தில் ஜாக்குலின் பெர்ணாண்டஸ் தடுத்து நிறுத்தம் | மீண்டும் நடிகர் சங்க தலைவர் ஆகிறார் மோகன்லால் | மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் | ஆர்ஆர்ஆர் - 9ம் தேதிக்காகக் காத்திருக்கும் 900 கோடி படம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வீடியோவைக் காட்டி சித்ராவை மிரட்டினேனா? : முதன்முறையாக ரக்ஷன் விளக்கம்

19 டிச, 2020 - 17:39 IST
எழுத்தின் அளவு:
Rakshan-open-about-news-connecting-with-Chitra

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை விஜே சித்ரா, சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மர்மம் பற்றி பல்வேறு யூகங்கள் மற்றும் பேட்டிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சித்ராவின் மரணம் பற்றி சின்னத்திரை பிரபலம் ஒருவர் அளித்த பேட்டியில், விஜய் டிவியில் தொகுப்பாளராக உள்ளவரும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கருக்கு நண்பராக நடித்தவருமான ரக்சன் மீது புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார். அதாவது சித்ராவும், ரக்சனும் டேட்டிங் சென்றதாகவும், அப்போது தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோவை வைத்து சித்ராவை ரக்சன் மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலே சித்ராவின் தற்கொலைக்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அவரது இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது உண்மையா இல்லை பொய்யான தகவலா என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது இது குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ரக்சன்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “நானும் சித்ராவும் டேட்டிங் சென்றதாகவும் அவரை வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் வெளி வந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. நானே குறைந்த சம்பளத்தில் விஜய் டிவியில் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை நடத்தி வருகிறேன். சித்ரா எனக்கு நல்ல தோழி தான், ஆனால் அவருடைய மரணத்துக்கு எந்த வகையிலும் நான் காரணம் அல்ல. சித்ராவின் மரணத்திற்கு கூட நான் சென்று இருந்தேன். என்னையும் சித்ராவையும் இணைத்துப் பேசுவது வேதனை அளிக்கிறது. இதுவெறும் புரளி.

இப்படித்தான் முன்பு ஜாக்குலினையும் என்னையும் குறித்து செய்தி பரப்பினார்கள். எதிலும் உண்மை இல்லை. நான் படிப்படியாக வளர்ந்து வருகிறேன். இந்தத் துறைக்கு வரும் முன்பே எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. காதல் திருமணம் தான் என்பதால் மனைவி புரிந்து கொள்கிறார். ஆனாலும், தொழில் ரீதியாக இந்தப் புரளிகள் என்னை வெகுவாகப் பாதிக்கின்றன” என வேதனையுடன் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வான 'அசுரன், தேன்'கோவா திரைப்பட விழாவிற்கு தேர்வான ... நாயகி ஆன தர்ஷா குப்தா நாயகி ஆன தர்ஷா குப்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
22 டிச, 2020 - 21:10 Report Abuse
Amirthalingam Shanmugam இது போன்ற புரளியை ( பொய்யாக இருக்கும் பட்சத்தில் ) கிளப்பும் நபர் எப்பேர்ப்பட்ட நடத்தை உள்ளவராக இருப்பார்?.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in