சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் |
மலையாளத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் அனு சித்தாரா. தமிழில் 5 ஆண்டுகளுக்கு முன்பு திமிரு 2 படத்தில் நடித்தார். அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்தார். தற்போது அவர் நடிக்கும் படம் அமீரா.
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ரா.சுப்ரமணியன் இயக்கியுள்ளார்.
படம் பற்றி இயக்குநர் ரா.சுப்ரமணியன் கூறியதாவது: ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி, ஒரு கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து, தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிறுத்தி, பத்து வருட தண்டனையும் பெற்றுக் கொடுத்து விடுகிறார். ஆனால் தண்டனைக்காலம் முடிந்து, அந்த குற்றவாளி சிறையில் இருந்து திரும்பிய பின், யதேச்சையாக அவரை சந்திக்கும் அந்த போலீஸ் அதிகாரிக்கு, உண்மையான குற்றவாளி அவர் இல்லை என்றும், அவருக்கு தவறாக தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டோம் என்பதும் தெரிய வருகிறது. இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி காரணமாக, அதற்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக, உண்மையான குற்றவாளி யார் என தேடி 10 வருடம் கழித்து மீண்டும் பயணப்படுகிறார் அந்த போலீஸ் அதிகாரி. இதுதான் அமீராவின் கதை என்கிறார்.
ஒரு படத்திலாவது வெற்ற பெற்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடிக்க நினைக்கிறார் அனு சித்தாரா. அமீரா மூலம் அது நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.