கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கும் படம் கிளாப். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. படத்தில் ஆதி, ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், நாசர், மைம் கோபி மற்றும் முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசை அமைக்கிறார். பிருத்வி ஆதித்யா இயக்குகிறார். கொரோனாவுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட படம், தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பை தொடங்கி, முடித்திருக்கிறது.
படம் குறித்து இயக்குனர் பிருத்வி ஆதித்யா கூறியதாவது: பொதுமுடக்க காலம் முடிந்த நிலையில், படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தபோது, முதல் ஆளாக படப்பிடிப்பை துவக்க ஆதி தான் பெரும் ஆர்வம் காட்டினார். தயாரிப்பாளர்களின் விருப்ப நாயகனாக இருப்பதை தாண்டி, இந்தப்படத்தில் அவர் அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார்.
பிரகாஷ் ராஜ் இப்படத்தில் மிக வலுவான கதாப்பாத்திரத்தில் தோன்றியுள்ளார். பிரபலமான நடிகர்கள் குழுவையும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான குழுவையும் ஒருங்கே கையாள்வதென்பது எளிய பணியல்ல. ஆனால் அதனை எந்த சிக்கலும் இல்லாமல் குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடித்துள்ளோம். என்றார்.