டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற திகில் படம் அவள். சித்தார்த் தயாரித்து, நடித்திருந்தார். மிலிந்த் ராவ் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். சித்தார்த்துடன் ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுரேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். தமிழில் வெளியான இந்தப் படம் அதன் பிறகு இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியானது.
இப்போது இதன் 2ம் பாகம் தயாராக இருக்கிறது. இதற்கான கதை, திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் ராவ் எழுயுள்ளார். மீண்டும் சித்தார்த் தயாரித்து, நடிக்கிறார். ஆண்ட்ரியாவும் நடிக்கிறார். இதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கி உள்ளது. சித்தார்த், ஆண்ட்ரியா தவிர மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. மிலிந்த் ராவ் தற்போது நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை முடித்த பிறகு இந்தப் படத்தை இயக்க இருக்கிறார்.