Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சென்னையைப் புறக்கணிக்கும் தமிழ்த் திரையுலகம்

17 டிச, 2020 - 17:43 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-boycott-Chennai

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாக்களின் தலைமையிடமாக சென்னை இருந்தது. அங்குள்ள ஸ்டுடியோக்களில் எப்போதும் படப்பிடிப்புகள் நடந்து கொண்டே இருக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஏன் ஹிந்தி படங்களின் படப்பிடிப்புகளும் அடிக்கடி நடக்கும். ஆனால், இன்றோ தமிழ்த் திரையுலகமே சென்னையைப் புறக்கணித்து ஐதராபாத்தில் தான் படப்பிடிப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது.

தற்போது ஐதரபாத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த', விஜய் சேதுபதி நடித்து வரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', ஆகிய படங்களின் படப்பிடிப்புகளுக்காக ரஜினிகாந்த், நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் அங்கு குழுமியுள்ளனர்.

சமீபத்தில்தான் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு அங்கு முடிந்தது. அடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பும் அங்கு ஆரம்பமாக உள்ளதாம். இப்படி ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் சென்னையைப் புறக்கணிப்பதால் இங்குள்ள தொழிலாளர்கள் பலருக்கு வேலை வாய்ப்புகள் பறி போகிறது.

சென்னையில் அந்தக் காலத்தில் தெலுங்குப் படங்கள் அதிகமாக படமாகி வந்த போது நடிகராக இருந்து முதல்வராகப் பதவியேற்ற என்.டி.ராமராவ் தெலுங்குப் படங்களின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தால் அதற்காக பல சலுகைகளை அறிவித்தார். அதன்பின் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் சென்னை பக்கம் வராமல் அங்கேயே தங்களது படப்பிடிப்புகளை நடத்த ஆரம்பித்தார்கள்.

அது போல, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடத்த வேண்டும் என்று ஏதாவது சலுகைகள் அறிவித்தால் தான் இங்கும் நடத்துவார்கள் போலிருக்கிறது. புதிது புதிதாக தயாரிப்பாளர்கள் சங்கம் உருவாகிறதே தவிர இங்குள்ள தொழிலாளர்களின் நிலையைப் பற்றி கவலைப்படுவதாக இல்லை என கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் தவிக்கும் பல திரைப்படத் தொழிலாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் பிஸியாகும் தமன்னாதெலுங்கில் பிஸியாகும் தமன்னா அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் இணைந்த கார்த்திக் - சந்தோஷ் நாராயணன் அந்தாதூன் தமிழ் ரீமேக்கில் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

S.Ganesan - Hosur,இந்தியா
19 டிச, 2020 - 11:57 Report Abuse
S.Ganesan சினிமாக்கள் இல்லாவிட்டால் ஒன்றும் குடி முழுக போவதில்லை. மக்களின் காசை பிடுங்கும் கூட்டம்
Rate this:
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
18 டிச, 2020 - 16:00 Report Abuse
Sadagopan Varadhachari தொழிலில் அரசியலை நுழைத்தால் இதுதான் கதி. இலங்கை வீரர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் முரளியாக நடித்த விஜய் சேதுபதிக்கு நடந்த கொடுமைகளுக்கு காரணமாயிருந்தவர்கள் ஏன் அதே முரளீதரனை டீம் மானேஜராக வைத்துக்கொண்டிருக்கும் சன் டீவி மாறனை எதிர்க்கவில்லை ஆக ஒட்டு மொத்த திரையுலகமும் ஒரு அரசியல் கட்சிக்கு அடிமை பட்டிருப்பது வெட்ட வெளிச்சமாகிறது. தொழில் வேறு அரசியல் வேறு என்பதை எப்போது திரைத்துறையினர் உணர்கின்றனரோ அப்போதுதான் விடிவு பிறக்கும்
Rate this:
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
18 டிச, 2020 - 14:58 Report Abuse
Sadagopan Varadhachari அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்பு எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த இடம் குட்டிசுவர்தான் . எந்த துறையுலும் பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் .உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் டீசல் பெட்ரோல் விலை உயர்வு என்பது அனைத்து ஓட்டுனர்களின் பிரச்சினை ஆனால் என்ன நடக்கிறது விலை ஏற்றினால் பாதிப்பு அனைவருக்குமே. இப்போது பிரச்சினை அடிப்படையில் போராட்டம் நடைபெறுவதில்லை எதிர்க்கட்சி அனுதாபிகள் மட்டும் தெருவில் இறங்கி போராடுவது ஆளும் கட்சி அனுதாபிகள் அதற்க்கு ஒத்துழைப்பு தருவதில்லை .இது உதாரணம்தான் இது போல திரைத்துறை, விவசாயத்துறை போனறு எல்லாவற்றிலும் அரசியல் நுழைந்து நிம்மதி இழக்க செய்து கொண்டு இருக்கிறது அந்தந்த துறை மக்கள்தான் இதே உணர்ந்து கொண்டு நடக்கவேண்டும் . தனி ஒருவனாக ஏதாவது ஒரு கடசியில் இருந்துகொள்ளுங்கள் /ஆனால் தொழில் சார்ந்த பிரச்சினை என்று வரும்போது அரசியல் ரீதியாக பிளவை உண்டாக்கி விடாதீர்கள் . உங்கள் தொழிலுக்கு நல்லதல்ல
Rate this:
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
18 டிச, 2020 - 10:32 Report Abuse
Amirthalingam Shanmugam தமிழ் படங்களே தேவையில்லை. மற்ற மொழிப்படங்களை " டப்பிங்" செய்து வெளியிட்டால் தமிழ் கலாச்சாரத்துக்கு நல்லது.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 டிச, 2020 - 04:24 Report Abuse
J.V. Iyer ஹிந்துக்களின் உணர்வுகளை புறக்கணித்தது. பிறகு தியேட்டர்களை புறக்கணித்தது. நல்ல கதைகளை புறக்கணித்தது. இப்போது அழிவை நோக்கி தமிழ் சினிமா பீடுநடை போடுகிறது.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in