நண்பன் பட வெற்றியை கொண்டாடிய துல்கர் சல்மான் | உதவியாளருக்கு கொரோனா : தனிமைப்படுத்திக் கொண்ட பவன் கல்யாண் | மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர் | பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை | ரஜினி பற்றி சூரி கொடுத்த அண்ணாத்த அப்டேட் | மாலத்தீவுக்கு அடுத்த விசிட் நடிகை ஷ்ரத்தா கபூர் | வக்கீல்சாப் : பவன்கல்யாண் நடிப்பை பாராட்டிய மகேஷ்பாபு | விஜய் சேதுபதியை சந்தித்த துருவ் விக்ரம் | ரெண்டகம் படத்தில் இணைந்த ஜாக்கி ஷெராப் | அமெரிக்காவில் கர்ணன் படம் பார்த்த தனுஷ் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கடந்த பதினைந்து வருடங்களாக நடித்து வருபவர் தமன்னா. தமிழில் கடந்த வருடம் அவர் கதாநாயகியாக நடித்து வெளிவந்த 'கண்ணே கலைமானே, தேவி 2, பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்' ஆகிய நான்கு படங்களுமே தோல்விப் படங்களாகவே அமைந்தது.
இந்த வருடம் தமிழில் தமன்னா நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. புதிய படங்களில் கூட அவர் ஒப்பந்தமாகவில்லை என்பதும் ஆச்சரியத் தகவல். ஆனால், தெலுங்கில் ஏற்கெனவே மூன்று படங்களில் நடித்து வருகிறார். தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அடுதத வருடத்தில் தெலுங்கில் தமன்னா நடித்து நான்கு படங்கள் வெளியாகலாம்.
தற்போது 'சீட்டிமார், குருதுண்ட சீதாகலம், அந்தாதூன் தெலுங்கு ரீமேக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது புதிதாக 'எப் 3' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
'எப் 3' படப்பிடிப்பு டிசம்பர் 23 முதல் ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அனில் ரவிப்புடி இயக்க தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 'எப் 2' கூட்டணியே மீண்டும் 'எப் 3' படத்திலும் இணைந்துள்ளது.