துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர் என பன்முகத் திறமையாளராக விளங்கி வருபவர் சத்யராஜ். இவருக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். சிபிராஜ் அப்பா வழியில் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருகிறார். ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் சத்யராஜ் அரசியல் குதிக்க இருப்பதாகவும், அவர் திமுகவுக்கு ஆதரவாக சட்டசபைத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் ஒரு தகவல் சமூகவலைதளத்தில் வைரலானது.
இது குறித்து சத்யராஜும், அவரது மகளும் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், “என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்" என சத்யராஜ் கூறியிருக்கிறார்.
திவ்யா சத்யராஜ் இது பற்றி கூறுகையில், “அப்பா என் உயிர் தோழன். என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் எனது சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இவர்களது இந்த பதில்கள் மூலம் திவ்யா விரைவில் அரசியல் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. விரைவில் அவர் எந்தக் கட்சி சார்பாக போட்டியிட போகிறார் என்பது தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்.