அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் மற்றும் தொகுப்பாளரான கமலுக்கு இணையாக மக்களிடம் அதிக வரவேற்பைப் பெறுவது பிக்பாஸ் குரல் தான். இதுவரை பிக்பாஸுக்கு யார் குரல் கொடுக்கிறார்கள் என்பது ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
முதல் இரண்டு சீசனில் கம்பீர குரலால் போட்டியாளர்களை அலற வைத்தவர், மூன்றாவது சீசனில் சாண்டி மற்றும் கவின் கோஷ்டியால் கொஞ்சம் ஜாலி பாஸாக மாறினார். சாண்டி அவரைக் 'குருநாதா' என அழைக்க பதிலுக்கு சிஷ்யா என அழைத்து நெகிழ வைத்தார். இந்த சீசனிலும் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து விட்டார்.
கமலிடமே கறாராக பேசும் பிக் பாஸ், இந்த சீசனில் போட்டியாளர்களில் ஜாலியாக பேசுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக நேற்றைய எபிசோட்டில் அர்ச்சனாவை அச்சு என்றும், அனிதாவை கன்னுக்குட்டி என்றும் அழைத்து, 'அட நம் பிக் பாஸ் இப்படி மாறி விட்டாரே?' என மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.