'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா | உண்மையாகவே மது அருந்தினாரா நானி |
இயக்குனர்கள் வெற்றிமாறன், சுதா கொங்கரா, கவுதம் வாசுதேவ மேனன், விக்னேஷ் சிவன் இயக்கிய குறும்படங்களை தொகுத்து பாவக் கதைகள் என்ற தலைப்பில் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிடுகிறது. இதில் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள படம் லவ் பண்ண உட்றணும். இதில் அஞ்சலியும், பாலிவுட் நடிகை கல்கி கோச்சரும் லெஸ்பியான நடித்திருப்பதாக தகவல்கள வெளியானது.
இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல் வருமாறு: அஞ்சலியும், கல்கியும் லெஸ்பியனாக நடித்திருப்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. படத்தின் ஸ்டில்ஸ்களை அப்படி பார்த்து அப்படி ஒரு தகவல்களை பரப்புகிறார்கள். அஞ்சலியும், கல்கியும் ஒரே அறையில் தங்கி பணியாற்றும் தோழிகள். அவர்கள் ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் தாங்கள் லெஸ்பியன் உறவில் உள்ளவர்கள் போல நடிப்பார்கள்.
அது எந்த மாதிரியான சூழ்நிலை என்பதுதான் படத்தின் கதை. தங்களை லெஸ்பியனாக காட்டிக் கொள்ள வேண்டிய இடத்தில் லிப்லாக் முத்தம் கொடுத்துக் கொள்வார்கள். படம் வெளிவந்த பிறகு எல்லாவற்றுக்கும் விடை கிடைக்கும் என்றார்கள்.