Advertisement

சிறப்புச்செய்திகள்

அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛டிவி நடிகை சித்ரா பேசிய ஆடியோ மூலம் சிக்கிய ஹேம்நாத்

17 டிச, 2020 - 10:39 IST
எழுத்தின் அளவு:
How-Chitra-husband-Hemnath-arrested?

சென்னை: ஹேமநாத் தந்தையிடம் ‛டிவி நடிகை சித்ரா பேசிய ஆடியோ மூலம் அவரது கணவர் ஹேமநாத்தை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகை சித்ராவின், மொபைல் போனில் பதிவாகியிருந்த, ஆடியோ பதிவு அழிக்கப்பட்ட தகவல், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த, டிவி நடிகை சித்ரா, பூந்தமல்லி அருகே, நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கெண்டார். உடன் தங்கி இருந்த, சந்தேக பேர்வழியான, அவரது கணவர் ஹேம்நாத், 32 என்பவரை, நசரத்பேட்டை போலீசார் கைது செய்து, பொன்னேரி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.சித்ராவின் தற்கொலை குறித்து, ஹேம்நாத்தின் பெற்றோரிடம், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார். சிறையில் இருக்கும், ஹேம்நாத்திடம், இன்று விசாரிக்க உள்ளார்.

இந்நிலையில், சித்ராவின் தற்கொலை வழக்கில், புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.இது குறித்து, போலீசார் கூறியதாவது: சந்தேகத்தால், தினமும் கேவலமான சொற்களால் தன் மனதை காயப்படுத்தி வந்த ஹேம்நாத்தின் நடவடிக்கை குறித்து, அவரது தந்தையிடம் சித்ரா கூறிஉள்ளார்.அவர் தற்கொலை செய்த பின், சித்ராவின் மொபைல் போனில் இருந்த தகவல்களை, ஹேம்நாத் அழித்துள்ளார். ஆனால், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என, ஹேம்நாத் சாதித்து வந்ததால், அவர் மீது சந்தேகம் வலுத்தது.

இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், சித்ராவின் மொபைல் போனில் இருந்த, ஆடியோ பதிவுகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட விபரங்கள் திரும்ப பெறப்பட்டன. அதில், ஹேம்நாத்தின் தந்தையுடன், சித்ரா பேசிய ஆடியோ பதிவு கிடைத்தது. இதுபற்றி கேட்டபோது தான், ஹேம்நாத் வசமாக சிக்கினார். அதன் பிறகே, தற்கொலைக்கு துாண்டியதாக அவர் கைது செய்யப்பட்டார். ஹேம்நாத் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து, ஊர் சுற்றி வந்தார்; பின், பிரிந்து விட்டார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உடல் நலப் பாதிப்பு - ஆபரேஷனுக்கு பண உதவி கேட்டு காமெடி நடிகர் பெஞ்சமின் உருக்கம்உடல் நலப் பாதிப்பு - ஆபரேஷனுக்கு பண ... 20 ஆண்டுகளுக்குப் பின் தெலுங்கில் மோகன்ராஜா 20 ஆண்டுகளுக்குப் பின் தெலுங்கில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in