'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. ஒரு படத்திற்கு சுமார் ஐந்து கோடி வரை அவர் சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கடந்த வருடம் நயன்தாரா நடித்து 'விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம், பிகில்' ஆகிய ஐந்து தமிழ்ப் படங்கள் வெளிவந்தன. இந்த வருடம் 'தர்பார், மூக்குத்தி அம்மன்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன.
கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக 'அண்ணாத்த' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ஐதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் 'அண்ணாத்த' படத்தின் மொத்த குழுவினரும் கலந்து கொண்டு ஒரு மாதத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
அதே சமயம் ஐதராபாத்தில் தனது காதலர் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்திலும் நயன்தாரா நடிக்கப் போகிறாராம். இரண்டு படத்திலும் மாறி மாறி ஒரே சமயத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
மேலும், காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் 'நெற்றிக்கண்' படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இப்படம்தான் நயன்தாராவின் அடுத்த வெளியீடாக இருக்கலாம்.