Advertisement

சிறப்புச்செய்திகள்

'இதுவல்லவோ செம ஜோடி' : கலக்கும் ஸ்வேதா பண்டேகர் திருமண புகைப்படங்கள் | 'வாரிசு' நாயகி ராஷ்மிகாவின் இரண்டு போட்டோ, இரண்டு நாட்களில் 27 லட்சம் லைக்ஸ் | பூஜை புகைப்படங்களைக் கூட வெளியிடாத 'விஜய் 67' குழு | நான் ஒன்றும் பிரேமம்-2 எடுக்கவில்லையே ; அல்போன்ஸ் புத்ரன் விரக்தி | மிஸ் ஆன லக்கேஜ் ; ராணாவின் கோபத்தை தனித்த விமான நிறுவனம் | மஞ்சள் உடை அணிவதற்கே பயந்தேன் : ஐஸ்வர்ய லட்சுமி | புதுவீடு கனவை நனவாக்கிய ராமர்! வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள் | திவ்யா ஸ்ரீதருக்கு வளைகாப்பு செய்த 'செவ்வந்தி' சீரியல் குழு | கணவர் ஒரு சாடிஸ்ட்: விவாகரத்துக்கு பின் மனம் திறந்த வைக்கம் விஜயலட்சுமி | சூர்யா அறிவித்து விலகிய 3 படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்யை இயக்கும் ஹரி

15 டிச, 2020 - 10:00 IST
எழுத்தின் அளவு:
Hari-to-direct-Arunvijay

சாமி 2 படத்தைத் தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யாவின் 39-வது படத்தை ஹரி இயக்க இருப்பதாக மார்ச் மாதம் அறிவிப்பு வெளியானது. 'அருவா' என அப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டு, இமான் இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கொரோனா ஊரடங்கால் திரைத்துறை பாதிக்கப்பட, அருவா பட சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாகவும் இயக்குநர் ஹரி அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில் சூர்யாவின் சூரரைப் போற்று படம் ரிலீஸ் பிரச்சினையில் சிக்கியது. அப்படத்தை ஓடிடியில் வெளியிடக்கூடாது என ஒருதரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது சூர்யா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஹரியும் கோரிக்கை வைத்தார். ஆனால் சூர்யா தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதன் தொடர்ச்சியாக அருவா படம் கைவிடப்பட்டு, அடுத்ததாக தனது மைத்துனரும், நடிகருமான அருண் விஜய்யை வைத்து ஹரி புதிய படம் இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது. அப்போது அது குறித்து இருதரப்புமே வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஹரி - அருண் விஜய் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சக்திவேல் இப்படத்தைத் தயாரிக்கிறார். அருண் விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படமாக இப்படம் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்தாண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் மாத ரிலீசாக படம் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகை சித்ரா தற்கொலை வழக்கு : கணவர் ஹேம்நாத் கைதுநடிகை சித்ரா தற்கொலை வழக்கு : கணவர் ... இரண்டு படங்களில் நடித்து வரும் நயன்தாரா இரண்டு படங்களில் நடித்து வரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

katharika viyabari - coimbatore,இந்தியா
16 டிச, 2020 - 14:28 Report Abuse
katharika viyabari அருண் விஜய் ஒரு சிறந்த நடிகர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in