'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! |
சென்னை : சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து அவரது கணவர் ஹேம்நாத்திடம் கடந்த 6 நாட்களாக போலீசார் விசாரிக்கின்றனர். அத்துடன் ஹேம்நாத்தின் தந்தை, சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர், விடுதியின் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
தனது மகள் சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் தாய் விஜயா குற்றம் சாட்டியிருந்தார். சித்ராவின் தற்கொலை வழக்கை போலீசாரும் , வருவாய் கோட்டாட்சியரும் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
சின்னத்திரை நடிகர்களுடன் சித்ரா நடனமாடியது கணவர் ஹேம்நாத்திற்கு பிடிக்கவில்லை. திருமணம் ஆன நாள் முதல் எந்த நடிகருடன் நடனமாடினாய் என கேட்டு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். தற்கொலை செய்த 9 ஆம் தேதி அன்றும், படப்பிடிப்பு முடிந்து சித்ரா வந்ததும் மீண்டும் யாருடன் நடனமாடினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் செத்து போ என ஹேம்நாத் கூறியதால் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து சித்ராவின் தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து உள்ளனர். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட உள்ளார். தற்போது கைது செய்யப்பட்ட ஹேம்நாத் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.