ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
மாரி செல்வராஜ் டைரக்சனில் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் மலையாள நடிகை ரஜிஷா விஜயன். இந்தப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜிஷா விஜயன், இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கோகோவை மையப்படுத்தி உருவாகியுள்ள கோகோ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளதுடன் அந்தப்படத்தின் படப்பிடிப்பையும் சமீபத்தில் நிறைவு செய்தார்..
இந்தப்படத்தில் கோகோ வீராங்கனையாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார் என்கிற தகவல் ஏற்கனவே வெளியானது. அதேசமயம் தற்போது அவரது கதாபாத்திரம் குறித்த டுவிஸ்ட் ஒன்றும் வெளியாகியுள்ளது. பொதுவாக ஸ்போர்ட்ஸ் படம் என்றால், அதில் முன்னணி விளையாட்டு வீராங்கனையாக, கஷ்டப்பட்டு இலக்கை அடைந்து சாதனை செய்யும் கதாபாத்திரத்தில் தான் கதாநாயகிகள் நடிப்பது வழக்கம். ஆனால் இந்த படத்தில் வீராங்கனையாக அல்லாமல், கோகோ பயிற்சியாளராக நடித்துள்ளாராம் ரஜிஷா விஜயன்.
அதேசமயம் 15 பேர் கொண்ட கோகோ டீமில் நிஜ வீராங்கனைகள் 14 பேரும், இன்னொரு முன்னணி வீராங்கனையாக மமிதா பைஜு என்பவரும் நடித்துள்ளனர்... ராகுல் ரிஜி நாயர் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு முன்பாக 'பைனல்ஸ்' என்கிற ஸ்போர்ட்ஸ் படத்திலும் சைக்கிள் பந்தய வீராங்கனையாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..