Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியை உடைத்தாரா அனிருத்?

13 டிச, 2020 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Did-Vijay--ARMurugadoss-split-by-Anirudh

தமிழ் சினிமாவில் விஜய் - ஏஆர் முருகதாஸ் கூட்டணி வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் ஒரு வெற்றிக் கூட்டணியாக இருந்தது. அவர்களது கூட்டணியில் 'துப்பாக்கி, கத்தி, சர்க்கார்' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அக் கூட்டணி மீண்டும் நான்காவது முறையாக விஜய்யின் 65வது படத்தில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே நாயகியாக காஜல் அகர்வால், இசையமைப்பாளராக தமன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்திலிருந்து ஏஆர் முருகதாஸ் வெளியேறினார் என்ற தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை அதிர்ச்சிடைய வைத்தது.

அவர் வெளியேறியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் 65வது படத்தை 'கோலமாவு கோகிலா, டாக்டர்' படங்களின் இயக்குனரான நெல்சன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த புதிய அறிவிப்புக்கு திரையுலகில் உள்ள பலரும் வாழ்த்துகளைச் சொன்னாலும் ஏஆர் முருகதாஸ் எந்த ஒரு வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, ஏஆர் முருகதாஸ், விஜய் கூட்டணி திடீரென உடைந்ததற்கு என்ன காரணம் என கோலிவுட்டில் விசாரித்த போது இசையமைப்பாளர் அனிருத்தை கை காட்டுகிறார்கள். விஜய் 65ன் இயக்குனர் நெல்சன், அனிருத் இருவரும் நெருங்கிய நண்பர்களாம். விஜய், ஏஆர் முருகதாஸ் இணையும் படத்திற்கு தான்தான் இசையமைப்பாளர் என்று நினைத்த நிலையில் தமன் இசையமைப்பாளர் என்பது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்ததாம். எனவே, சில பல விஷயங்களைச் செய்து விஜய், முருகதாஸ் கூட்டணி உடைய காரணமாக இருந்திருக்கிறார் என்கிறார்கள்.

விஜய், நெல்சன் புதிய கூட்டணியின் விஜய் 65வது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் நியமிக்கப்பட்டதிலிருந்தே உங்களுக்குத் தெரியவில்லையா என நம்மிடமே திருப்பிக் கேட்கிறார்கள்.

நேற்று விஜய் 65வது படத்திற்கு ஏஆர் முருகதாஸ் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்ற செய்தியில் அவருக்கு யார் மீது கோபமோ என நாம் கேட்டிருந்தோம். அதன் அர்த்தம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இணைந்த பிரேமம் நாயகிகள்மீண்டும் இணைந்த பிரேமம் நாயகிகள் தனுஷ் பட நாயகியின் ஸ்போர்ட்ஸ் படத்தில் கேரக்டர் ட்விஸ்ட் தனுஷ் பட நாயகியின் ஸ்போர்ட்ஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in