புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு | இயக்குனருடன் நெருக்கம் - மீரா ஜாஸ்மின் வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு | நடிகர் பாலாவின் முன்னாள் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் இசையமைப்பாளர் | இசையமைப்பாளருக்கு கேரள அரசு விருது : குஷி படக்குழு மகிழ்ச்சி | ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி | இந்தியாவில் அதிக பிரபலமான நடிகைகள் : டாப் 10ல் தென்னிந்திய நடிகைகள் ஆதிக்கம் | இந்தியாவின் அதிக பிரபல நடிகர் : நம்பர் 1 விஜய், நம்பர் 6 அஜித்குமார் | ஜுன் 9ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 66 கோடி வசூலித்ததாக அறிவிப்பு | அதிதி ஷங்கரைப் பாராட்டிய எஸ்ஜே சூர்யா |
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய்யின் 65வது படத்தை இயக்கப் போவது ஏஆர் முருகதாஸ் என செய்திகள் வெளிவந்தன. அப்படத்தின் நாயகியாக காஜல் அகர்வால், இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி. பாடலுக்கான இசைப் பணியைக் கூட தமன் ஆரம்பித்துவிட்டார் என்றார்கள்.
ஆனால், திடீரென ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் அப்படத்திலிருந்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் விலகிவிட்டார் என செய்திகள் வர ஆரம்பித்தன. அதற்கடுத்து 'டாக்டர்' பட இயக்குனர், முருகதாஸ் இடத்தை நிரப்பப் போவதாக தகவல் வெளியாகி, கடைசியில் அதுவே உண்மையானது.
சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் 65வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. திரையுலகத்தில் உள்ள பலரும் விஜய்யின் புதிய படத்திற்கும், விஜய்யை இயக்கும் வாய்ப்பை சீக்கிரமே பெற்ற நெல்சனுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இதுவரை புதிய குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கவில்லை. 'துப்பாக்கி, கத்தி, சர்க்கார்' படங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யை இயக்கக் கிடைத்த வாய்ப்பு பறி போனதில் அவர் கோபமாக இருப்பதாகவே தெரிகிறது. யார் மீது அவருக்குக் கோபமாக இருக்கும் ?.