Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜனவரியில் மீண்டும் தொடங்கும் இந்தியன் 2?

11 டிச, 2020 - 20:18 IST
எழுத்தின் அளவு:
Indian-2-shoot-from-January

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு தடைகள் ஏற்பட்டு வருகிறது. பல பிரச்சினைகளுக்கு பிறகு கடந்த ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமானது. ஆனால் கிரேன் விபத்து, கொரோனா ஊரடங்கு என பிரச்சினைகள் தொடர்ந்ததால் படத்தின் வேலைகள் முடங்கின.

ஊரடங்கிற்கு இடையே படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்தாலும், இந்தியன் 2 வேலைகள் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தன. இதனால் நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்தப்பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம், பிக்பாஸ் 4 தமிழ் என அவர் பிஸியாகிவிட்டார்.

இதனால் கோபமடைந்த இயக்குனர் ஷங்கர் லைகா நிறுவனத்திடம் கடிந்து கொண்டார். படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அந்நிறுவனத்திடம் அவர் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அதனை ஏற்க லைகா மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் இந்தியன் 2, மற்றொரு பக்கம் விக்ரம் என மாறி மாறி நடிக்க கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சரக்கு பாட்டில் உடன் போட்டோ : சர்ச்சையில் ரஜினி, அஜித் ஹீரோயின்சரக்கு பாட்டில் உடன் போட்டோ : ... மீண்டும் இணையும் பிரசாந்த் - சிம்ரன் ஜோடி! மீண்டும் இணையும் பிரசாந்த் - சிம்ரன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in