Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நெஞ்சம் மறப்பதில்லை' - கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் வெளியீடு?

11 டிச, 2020 - 19:37 IST
எழுத்தின் அளவு:
Nenjam-marappathillai-release-may-be-christmas-and-pongal

செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'நெஞ்சிருக்கும் வரை'. இப்படம் முடிவடைந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. சில பல பிரச்சினைகளால் படத்தின் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது. தற்போது படத்தை வெளியிடும் முயற்சியில் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாம்.

படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமை, சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவற்றின் பேச்சுவார்த்தை ஆரம்பமாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தைப் பார்த்த வினியோக நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், “நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ராம்சே கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா அசத்தலாக நடித்துள்ளார். ரெஜினாவும் நடிப்பில் சிறப்பு. இப்படம் விரைவில் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன். கடவுளுக்கும், பேய்க்குமான போராட்டம். செல்வராகவன் வசனங்கள் பவர்புல்லாக இருக்கிறது, பின்னி பெடல் எடுத்திருக்கிறார்,” எனப் பாராட்டியுள்ளார். அவருக்கு செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார்.

விரைவில் வர இருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தன்றோ அல்லது பொங்கலுக்கோ படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்களாம்.

ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள சில படங்கள் எப்போது வரும் என பத்து நாட்களுக்கு முன்புதான் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் ஒரு படத்தின் வெளியீட்டிற்கு ஒரு விடிவு காலம் ஆரம்பித்துவிட்டது. மற்ற படங்களுக்கும் அப்படியே நடந்தால் நல்லது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விராட பருவம்-ல் இணைந்த நிவேதாவிராட பருவம்-ல் இணைந்த நிவேதா மாநாடு : முடிந்தது புதுச்சேரி படப்பிடிப்பு மாநாடு : முடிந்தது புதுச்சேரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in