175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
ஆசாமி, அகடம், கங்காரு, ஸ்கெட்ச், பிச்சுவா கத்தி, வந்தாமல உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. கடைசியாக மிக மிக அவசரம் என்ற படத்தில் போலீஸ் கான்ஸ்ட்பிளாக நடித்து கவனம் ஈர்த்தார். ஜெஸி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படமும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் சட்டம் தன் கடமையை செய்யும் என்ற படத்தில் நடிக்கிறார். வெங்கடபதி பிலிம்ஸ் சார்பில் புவனேஸ்வரி சங்கர் தயாரிக்கிறார். புதுமுக இயக்குநர் குருவேல் கார்த்திக் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: நாடக காதலுக்கு சட்டம் தான் வேலை செய்யும், உண்மை காதலுக்கு கட்டம் தான் வேலை செய்யும் என்பதே இந்த படம் சொல்ல வரும் கருத்து. 'அழகென்ற சொல்லுக்கு அமுதா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரிஜன் சுரேஷ் இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.