Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவாஜியை அவமானப்படுத்துவதா?: நாசர் கண்டனம்

11 டிச, 2020 - 14:39 IST
எழுத்தின் அளவு:
Nassar-oppose-trolling-Sivaji

ரஜினி, கமல் ஆகிய இருபெரும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விமர்சிப்பவர்கள், சிவாஜி கட்சி ஆரம்பித்ததையும் அதில் அவர் அனுபவத்தையும் ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். அதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைத்தளங்களில் சிவாஜி கடுமையாக கிண்டல் செய்யப்படுகிறார். இதை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிவாஜி இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய வரம். பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேசவைத்ததிலும் திரை நடிப்பு கலையில் ஒரு புத்திலக்கணம் வகுத்தவர். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழ்த்திரை அப்படியொரு கம்பீரமான குரல் கேட்டதில்லை . சிம்மக்குரல் என்பது சும்மா கொடுத்த பட்டமன்று .

சமீபத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர் குரலையும் நடிப்பையும் மலிதாய் பயன்படுத்தியது அவர் பால் அன்பும், மரியாதையும் கொண்ட அத்தனை பேர் மனதையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறது.

தேர்தல் காலமது நெருங்கி வருகின்ற இவ்வேளையில் , திரைத்துறையில் இருந்து பலரும் அரசியல் களமிறங்குகின்றன . சிவாஜி ஐயாவின் அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, அரசியல் விமர்சகர்கள் கீழ்த்தனமாய் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது .

அவரது அரசியல் பயணம் நீண்ட வரலாறு. பெரும் தலைவர்களோடு பழகியும், புரிந்தும் வந்தவர் . அவர் என்றும் கள்ளம் கபடமற்று மக்களுக்கானவராய் இருந்து வந்தார் . இனியும் அவர் பெயரை கண்டபடி பயன்படுத்தாதிருக்க வேண்டுமென்று ஒட்டுமொத்த நடிகர் சமூகத்தின் சார்பாய் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு நாசர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
விஜய், சூர்யா படங்களின் நாயகியாக ராஷ்மிகா?விஜய், சூர்யா படங்களின் நாயகியாக ... புதுமுகங்களின் சூறாவளி புதுமுகங்களின் சூறாவளி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Muthu Kumar - Manama,பஹ்ரைன்
16 டிச, 2020 - 16:01 Report Abuse
Muthu Kumar நாசர் கூறுவது முற்றிலும் உண்மை. சிவாஜி அவர்கள் பெயரை தேவை இல்லாமல் களங்கப் படுத்த வேண்டாம். அவர் செய்த பல நல்ல காரியங்கள் உள்ளன. என்ன இப்போ உள்ளவர்களை போல அவருக்கு வெளியில் நடிக்க தெரியாது. கேமரா முன்பு மட்டுமே நடிக்க தெரிந்தவர்.இப்போது அவரின் பெயரை களங்கப் படுத்துபவர்ளுக்கு மக்களின் செல்வாக்கு என்ன என்பதை தேர்தல் நேரத்தில் மக்கள் தெரிவிப்பார்கள்.
Rate this:
ashok kumar - coimbatore,இந்தியா
15 டிச, 2020 - 20:15 Report Abuse
ashok kumar கருணாநிதிக்கு பதிலாக சிவாஜி ஆட்சி செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தமிழ்நாடு இந்தியாவின் முதன் மாநிலமாக இருந்திருக்கும்..
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
15 டிச, 2020 - 09:09 Report Abuse
Bhaskaran சிவாஜி அன்பே ஆருயிரே போன்ற திரைப்படங்களில் எல்லாம் நடித்திருக்க வேண்டாம்
Rate this:
ravi - chennai,இந்தியா
15 டிச, 2020 - 07:24 Report Abuse
ravi சார் நாசர் நீங்கள் சொல்வது நூத்துக்கு நூறு உண்மை-இந்த திராவிஷங்களுக்கு ரஜினி என்றாலே ஒரு விதமான பேதி- அதற்கு அவரை பயப்படுத்த கலைத் தாயின் முதல் மைந்தன் சிவாஜியை அசிங்கப்படுத்துவதும் விஜயகாந்த் ராஜேந்தர் போன்றவர்களை சுட்டிக்காட்டியும் ரஜினி மட்டும் வெல்வாரா என்று மூடத்தனமாக பேசுகிறார்கள். இந்த திராவிஷசங்க செய்த ஊழல்கள் எண்ணிலடங்கா. ஏதாவது ஒரு சான்றிதழை அரசு அலுவலகங்களில் ஐயாயிரம் ருபாய் கொடுக்காமல் வாங்குங்களேன். இந்த ஜெயக்குமார் உத்தமர் போல பேசுகிறார். இவர்கள் ஆட்சியில் லஞ்சம் ஒரு ரூபாய்க்கூட குறையவில்லை. லஞ்சம் இல்லாத துறையே இல்லை கல்வித்துறை உட்பட.
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
13 டிச, 2020 - 02:58 Report Abuse
Aanandh அயோக்கியத்தனம் அறியாததால் தான் அவரால் அரசியலில் தொடர அருகதை பெறவில்லை.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in