இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை | ரஜினி 170 : புது ஹேர்ஸ்டைலில் ரஜினிகாந்த்… | ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? - போனி கபூர் விளக்கம் |
'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு இன்று(டிச., 10) முதல் ஆரம்பமானது.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். கடந்த சில நாட்களாக இப்படத்தில் சமந்தா நடிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாக ஆரம்பித்தன. படத்தில் நயன்தாராவுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம், தனக்கில்லை என்ற காரணத்தால் அவர் விலகிவிட்டதாகச் சொன்னார்கள்.
ஆனால், அந்த சர்ச்சைகளுக்கும் வதந்திகளுக்கும் படக்குழுவினர் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். இன்றைய படப்பிடிப்பு ஆரம்பம் குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் சமந்தா பெயரும் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் படத்தில் அவர் நடிப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளது.
'நானும் ரௌடிதான்' படத்திற்குப் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி இணைகிறது. கடந்த வருடம் வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு சமந்தா நடிக்க உள்ள படம் இது. அதேசமயம் இன்றைய படத்தின் பூஜையில் நடிகைகள் நயன்தாரா, சமந்தா பங்கேற்கவில்லை. விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் உள்ளிட்டவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.