Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலிவுட் ஹீரோயின்கள் மட்டுமே ஜோடி : பிரபாஸ் கறார் முடிவு

10 டிச, 2020 - 13:57 IST
எழுத்தின் அளவு:
Bollywood-heroines-:-Prabhas-says-strictly

'பாகுபலி' படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் நட்சத்திரமாக உயர்ந்தார் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டுமே வசூலைப் பெற்றது.

தற்போது 'ராதேஷ்யாம்' படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து 'ஆதி புருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படம், சலார்' ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.

இவற்றில் 'ஆதி புருஷ்' படத்தில் அவருடைய ஜோடியாக பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடிக்கப் போகிறார். நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் தீபிகா படுகோனே தான் ஜோடி. அடுத்து 'சலார்' படத்திலும் பாலிவுட் நடிகையைத்தான் ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என கறாராக சொல்லிவிட்டாராம். அதனால், கேஜிஎப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்க உள்ள 'சலார்' படத்தில் நாயகியாக நடிக்க திஷா பதானி உள்ளிட்ட சில பாலிவுட் ஹீரோயின்களிடம் பேசி வருகிறார்களாம்.

தென்னிந்திய நடிகைகளை நடிக்க வைத்தால் இந்திய ஸ்டார் என்ற இமேஜ் கிடைக்காது. எனவே, இனி தான் நடிக்கும் படங்களில் பாலிவுட் நடிகைகள் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தன்னை வைத்து படம் தயாரிக்க வருபவர்களிடமும் சொல்லிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடி சொத்துகளை அடமானம் வைத்த சோனு சூட்ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடி சொத்துகளை ... 'காத்து வாக்குல ரெண்டு காதல்' : சமந்தா சர்ச்சைக்கு முடிவு 'காத்து வாக்குல ரெண்டு காதல்' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
11 டிச, 2020 - 06:55 Report Abuse
NicoleThomson மாபியா கான் நடிகர்கள் இவரை வளர விடுகிறார்கள என்று பாப்போம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in