Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனி விமானத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு செல்லும் ரஜினிகாந்த்

10 டிச, 2020 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Rajini-to-fly-hyderabad-for-Annatha-shooting

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு இன்னும் ஆரம்பமாகாமலேயே உள்ளது.

ரஜினிகாந்த்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் படப்பிடிப்பை இன்னும் ஆரம்பிக்காமல் இருந்தார்கள். இந்நிலையில் அடுத்த மாதம் புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளதால் அதற்குள்ளாக அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துத் தர ரஜினிகாந்த் சம்மதம் சொல்லிவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதற்காக ஐதராபாத்தில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம். மீதமுள்ள முழு படப்பிடிப்பையும் அங்கு பலத்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்த படக்குழு தயாராகி வருகிறதாம். கடுமையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்பட்ட பின்னர் தான் குழுவினர் படப்பிடிப்பில் இறங்க உள்ளார்களாம்.

அடுத்த சில நாட்களில் அங்கு படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக ரஜினிகாந்த் சிறப்பு தனி விமானத்தில் ஐதராபாத் செல்ல உள்ளாராம். அவரைச் சுற்றி எப்போதும் மருத்துவ பாதுகாப்பு வளையம் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமாம், இடையில் ரஜினிகாந்த் மட்டும் சில நாட்கள் புத்தாண்டிற்காக ஓய்வு எடுக்க சென்னை திரும்புவார் என்கிறார்கள். கட்சி அறிவிப்புத் தேதியைப் பொறுத்து சில பல மாற்றங்கள் இருக்கலாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறேனா ? - அனசுயா பதில்சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறேனா ? - ... ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடி சொத்துகளை அடமானம் வைத்த சோனு சூட் ஏழைகளுக்கு உதவ ரூ.10 கோடி சொத்துகளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11 டிச, 2020 - 18:30 Report Abuse
Ramesh R தனி விமானம். எளிமையின் உருவம் இவர்
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
11 டிச, 2020 - 00:42 Report Abuse
Aanandh கடைசிவரை உருப்படியாகப் போவதில்லை. படமும் கட்சியும் க்ளோஸ்தான்.
Rate this:
THANARAJ ABRAHAM - delhi,இந்தியா
10 டிச, 2020 - 21:18 Report Abuse
THANARAJ ABRAHAM ஒருவேளை தமிழக முதல்வர் ஆனபிறகும் விடுப்பு எடுத்து நடிக்கச் சென்றால் தமிழகத்தை யார் காப்பாற்றுவது?
Rate this:
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
10 டிச, 2020 - 13:10 Report Abuse
Amirthalingam Shanmugam அண்ணாத்தே நீங்க " அண்ணாத்தே" தான்.உங்கள யாரும் அடிச்சுக்கமுடியாது ...அடிச்சுக்கமுடியாது..
Rate this:
Vadivel Raja S - chennai,இந்தியா
10 டிச, 2020 - 12:23 Report Abuse
Vadivel Raja S அய்யா, உங்கள் வெப்சைடில் இருபுறமும் உள்ள விளம்பரங்களால் செய்திகளை படிப்பதில் சிரமமாக உள்ளது. செய்திகளை முழுவதும் மறைத்து விடுகிறது. உடனடியாக தீர்வு தேவைப்படுகிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in