சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
வளர்ந்து வரும் இசை அமைப்பாளர் சி.சத்யா. தற்போது பல படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் இசை அமைத்திருந்த நாங்க ரொம்ப பிசி படம் சின்னத்திரையில் நேரடியாக வெளியானது. நல்ல முறையில் இசை அமைத்திருந்தும், சின்னத்திரையில் வெளியானதால் அது வெளியில் தெரியாமல் போய்விட்டது என்கிறார் சத்யா. அவர் மேலும் கூறியதாவது:
இயக்குநர் பத்ரியின் 'ஆடுகிறான் கண்ணன்' தொலைக்காட்சித் தொடர் மூலம் தான் நான் இசையமைப்பாளரானேன். அதன்பின் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அமையவில்லை. 'நாங்க ரொம்ப பிசி' படத்தின் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சேர்ந்து வேலை செய்தோம்.
இந்தப்படம், நேரடியாகத் தொலைக்காட்சியில் வெளியானதால் அதிகம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் குறைவாகவே இருந்தது. திரையரங்குகளில் படம் வெளியானால் தான் என் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் மீது கவனம் இருக்கும், அவர்கள் திறமை வெளியாகும் என்று நினைக்கிறேன்.
இப்போது, த்ரிஷா நடிப்பில் லைகா தயாரிப்பில் சரவணன் இயக்கியுள்ள ராங்கி தயாராகிவிட்டது. எழில், ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் ஆயிரம் ஜென்மங்கள், தீதும் நன்றும், ஆரி நடித்துள்ள அலேகா, அரண்மனை 3' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன்.
கொரோனா காலத்தில் கொரோனா என்ற சொல்லைச் சொல்லாமலே 'விழித்திரு தனித்திரு' என்கிற பாடலை உருவாக்கினேன். அஜித் பிறந்த நாளுக்காக ஒரு பாடல், பெண் காவலர்களுக்காக ஒரு பாடல் உருவாக்கினேன். இன்னும் சில பாடல்கள் தயாராக இருக்கின்றன. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்.
அமேசான் இணையத்தில் பிரபல பாடல்களின் ரீமிக்ஸ் தொடர் போல் வெளியிடவிருக்கிறார்கள். அதற்காக எம்ஜிஆர் நடிப்பில் கேவிமகாதேவன் இசையில் எஸ்பிபி பாடிய முதல்பாடலான 'ஆயிரம் நிலவே வா' பாடலை கெடுக்காமல் ரீமிக்ஸ் செய்திருக்கிறேன். அது வெளியாகும்போது பெரிய வரவேற்பு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.