‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா(29), சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தவர் சித்ரா. இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு தொழில் அதிபர் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமண தேதியை முடிவு செய்யவிருந்தார். ஜனவரியில் திருமணம் நடக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷுட்டிங் முடித்து விட்டு நேராக ஓட்டலுக்கு வந்துள்ளார் சித்ரா. அவருடன் அவர் திருமணம் செய்ய இருக்கும் ஹேமந்த்தும் வந்திருந்தார். இருவருக்கும் சண்டை எதுவும் நடந்ததா இல்லை, வேறு ஏதும் பிரச்னையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சித்ராவின் கன்னத்தில் காயமும் உள்ளது. அதுப்பற்றியும் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. சித்ரா தற்கொலை தொடர்பாக ஹேமந்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமூகவலைதளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சித்ரா, அடிக்கடி விதவிதமான காஸ்டியூம் அணிந்து கொண்டு ஏராளமான போட்டோக்களை பதிவிட்டு வந்தார். டிக் டிாக் போன்ற செயலிகளிலும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். சமூகவலைதளத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சித்ராவின் இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.