விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
திருவண்ணாமலை : தடையை மீறி, அண்ணாமலையார் மலை மீது ஏறி, மஹா தீப தரிசனம் செய்த நடிகை சஞ்சிதா மீது நடவடிக்கை எடுக்கப்படும், என, மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கர் கூறினார்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நவ., 29-ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்பட்டது. இந்த தீபம், நாளை வரை எரியும். மலை உச்சியில் ஏற்றப்பட்ட மஹா தீபத்தை, பக்தர்கள் மலையேறி சென்று பார்க்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை தடை விதித்துள்ளது. மலையில், வனத்துறையினர் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலை உச்சிக்கு சென்று, மஹா தீப தரிசனம் செய்த நடிகை சஞ்சிதா ஷெட்டி, தான் தரிசனம் செய்த படத்தை, அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
தடையை மீறி, அவர் மலைக்கு சென்றது குறித்து, மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கரிடம் கேட்டபோது, நடிகை சஞ்சிதா ஷெட்டியை யார் மலைக்கு அழைத்து சென்றது என தெரியவில்லை. உள்ளூர் நபர்களின் உதவியோடு தான் சென்றிருப்பார். இது குறித்து விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.