Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொகுசு வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள் : ஏ.ஆர்.ரஹ்மான்

08 டிச, 2020 - 15:09 IST
எழுத்தின் அளவு:
AR-Rahman-advice-to-youths

திறமையான இளைஞர்களை கவுரப்படுத்தி விருது வழங்கி கவுரவிக்கும் சர்வதேச அமைப்பான பாப்டாவின் தூதராக இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சிறந்த விஷயங்கள் கூட சில நாட்களில் போர் அடித்துவிடும். வாழ்க்கையின் எந்த ஒரு தருணத்திலும் அந்த சலிப்பு ஒரு மனித குணமாக இருக்கும். புதிய விஷயங்களை செய்வதன் மூலம் தான் அதை போராடி வெல்ல முடியும். நம்முடைய வலது கரத்தால் ஒரு விஷயத்தை சிறப்பாக செய்ய முடிந்தால் அதை இடது கையாலும் செய்ய பழகிக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். எனவே நம்முடைய சொகுசான வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து புதிய விஷயங்களை செய்ய வேண்டும்.

இப்போதும் கூட நான் வீட்டில் சும்மா உட்கார்ந்திருந்தால் மாயாஜாலம் நிகழ்ந்து விடாது. நான் தொடர்ந்து எனக்கு சவால் விடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் சில நாட்களிலேயே அந்த மாயாஜாலங்கள் எல்லாம் மறைந்து மூளை செயலற்றுப் போய் விடும். நாம் ஒரு விஷயத்தை செய்து முடித்து விட்டால் அதிலிருந்து விலகிப் போய் விட வேண்டும்.

ஒரே உணவை கூட நம்மால் தொடர்ந்து 5 நாட்களுக்கு உண்ண முடியாது. இது கலை, சினிமா, எழுத்து அனைத்துக்கும் பொருந்தும். எப்போதும் ஒரே மாதிரியான விஷயங்களை உடைத்து வெளியே வருவதற்கான வழிகளை காண வேண்டும். இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் திறமையாளர்கள் உலகளாவிய மேடைகளை அலங்கரிப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
காலம் நம்மை அடிக்கடி பிரிக்கிறது: கேமரா பற்றி அறிவழகன் உருக்கம்காலம் நம்மை அடிக்கடி பிரிக்கிறது: ... சரத்குமாருக்கு கொரோனா சரத்குமாருக்கு கொரோனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
14 டிச, 2020 - 14:17 Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ வாய்ப்பிற்க்காக எல்லாம் அட்ஜெஸட் செய்துவிட்டு பின் மிட்டு என்பது, சீனியர் நடிகையானபின் இளம் நடிகைகளை துணிச்சலாக மறுக்கச்சொல்வது, போன்றதுதான் இந்த அட்வைசும், நல்லா வசதியா எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு இன்னும் அனுபவிச்சிகிட்டு ஊரானுக்கு அட்வைஸ்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
10 டிச, 2020 - 16:31 Report Abuse
 Muruga Vel வெளிநாட்டில் இவர் பாட்டை கேட்க ஆவலோடு ரசிகர்கள் வந்தால் கத்துக்குட்டி பாடகிகளை பாடவிட்டு பணம் மட்டுமே குறியா இருப்பவர் இந்த ரஹ்மான்
Rate this:
binu nair - chennai,இந்தியா
09 டிச, 2020 - 17:48 Report Abuse
binu nair ஒரே உணவு மட்டுமல்ல ஒரே மதத்திலும் உங்களால் அதிக நாட்கள் இருக்க முடியாது. உறவுகளுக்கும் இது பொருந்துமா ரஹ்மான்?.
Rate this:
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
09 டிச, 2020 - 14:14 Report Abuse
shakti ஆர் ரஹ்மான் சார், அப்படியே இவான் போல்கா (Ivan Polka ) பாடலை தாங்கள் காப்பியடித்து ஏர்டெல் ரிங்டோனாக போட்ட கதையையும் சொல்லுங்களேன்
Rate this:
09 டிச, 2020 - 07:04 Report Abuse
ஐஷ்வர்யன் மிகவும் பலனுள்ள யதார்த்த அறிவுரை!
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in